26.4.17

Anjukku Onnu Release Again

பேரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் s.சண்முகம் தயாரிப்பில் உருவாகிய திரைப்படம் அஞ்சுக்கு ஒண்ணு.இத்திரைபடத்தை ஆர்வியார் இயக்கியிருந்தார் . இத்திரைப்படத்தில்  ஜெரால்டு, ராஜசேகர்,அமர்,நசீர்,சித்தார்த்,உமாஸ்ரீ ,மேக்னா இவர்களுடன் சிங்கம் புலி ,முத்துக்காளை ,உமா ,கசாலி,ஷர்மிளா,காளையப்பன், சிவநாரயனமூர்த்தி  மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை   - சாகித்யா.ஆர்,ஒளிப்பதிவு  - நந்து,படத்தொகுப்பு - வி பழனிவேல்.கட்டிட வேலை செய்யும் கூலி தொழிலாளர்களின் வாழ்கையை மிக யதார்த்தமாக கூறிய படம். மேலும் கட்டிட வேலை  செய்யும் கூலி தொழிலாளர்கள் எப்படியெல்லாம் வாழலாம், எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதை இத்திரைப்படத்தில்  மிகவும் எதார்த்தமாக இயக்குநர் ஆர்வியார் கூறியிருந்தார். கட்டிட வேலை செய்யும் ஐந்து இளைஞர்களின் வாழ்கையில் ஒரு பெண் வருகிறாள். அதன் பின் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.தற்பொழுது இத்திரைப்படம் மீண்டும் ரிலீசாகிறது.







No comments :
Write comments